முதல்வரிடம் வாழ்த்து பெற்ற எம்.எஸ்.பாஸ்கர்
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் கருணாநிதியை, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சந்தித்ததார். தமிழக அரசின் சார்பில் 20007ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது மொழி படத்தில நடித்ததற்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு நன்றி சொல்லும் விதமாக முதல்வரை சந்தித்தார். நன்றி சொன்ன எம்.எஸ்.பாஸ்கருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
இதுபற்றி எம்.எஸ்.பாஸ்கர் கூறும் போது:- மொழி படத்துல எனக்கு கிடைத்தது மிகச் சிறந்த வேடம். இயக்குநர் ராதாமோகன் மிகச்சிறந்த இயக்குநர். அவர் இந்தப் படத்தில என்னை சிறப்பாக நடிக்க வைத்துவிடுவான் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.
இந்தப் படத்திற்காக 2007ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது மொழி படத்துக்காக எனக்கு அறிவிக்கப்பட்ட போது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அதுவும் என் தந்தையாக மதிக்ககூடிய முதல்வர் கலைஞர் அப்பா கையால் பெறுகிறேன் என்று நினைக்கிற போது எல்லை இல்லா மகிழ்ச்சி.
எனக்கு நடிகர் திலகம் சிவாஜி அப்பாவின் ஆசிர்வாதமும், கலைஞர் அப்பாவின் வாழ்த்தும் நிச்சயமாக எப்போதும் உண்டு. கலைஞர் அப்பா கையால் விருது பெறுவதை இப்பிறவியில் கிடைத்த பெரிய பாக்யமாக கருதுகிறேன்.
இந்த மொழி படத்தை தயாரித்த பிரகாஷ்ராஜ், இயக்குநர் ராதாமோகன் மற்றும் இந்த படத்தில் நடித்த, பணிபுரிந்த அனைவருக்கும் இந்த நேரத்திலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அதே போல 2007, 2008 ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முதல்வரை சந்தித்த போது அவருடன்அவரது செய்தி தொடர்பாளர் ஜி.பாலன் உடன் சென்றார்.
எம்.எஸ்.பாஸ்கர் இப்போது சிம்புதேவன் இயக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், மதுமிதா இயக்கும் கொலகொலயாம் முந்திரிக்கா, வீரசேகரன், மதராசபட்டினம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.