Monday, June 28, 2010

இலங்கை தமிழராகும் எம்.எஸ்.பாஸ்கர்


'தசாவதாரம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசனின் படம் என்றாலே அதில் எம்.எஸ்.பாஸ்கரை எதிர்பார்க்கலாம், என்று என்னும் அளவிற்கு தசாவதாரத்தில் கலைகட்டியிருப்பார் பாஸ்கர். திறமைசாலிகளை எப்பவும் தன் பக்கத்திலே வைத்திருக்கும் கமல், தனது புதிய படத்திற்கு நடிகர்களை தேவு செய்து வெளிநாடுகளுக்கு பறக்க இருக்கிறார்.

'மன்மதன் அம்பு' படத்தில் இல்லாத எம்.எஸ்.பாஸ்கருக்கு கடைசி நேரத்தில் இருந்து கமலிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. எப்படி? என்றால், நிகழ்ச்சி ஒன்றில் எம்.எஸ்.பாஸ்கரையே கவனித்துக்கொண்டிருந்த கமல்ஹாசன், எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து 'கால்ஷீட் கிடைக்குமா' என்று கேட்டாராம். 'இது என்ன கேள்வி உங்க படத்தில நடிக்க எனக்கு பாக்யம் வேணும்' என்றாராம்.

பாஸ்கருக்கு இலங்கை தமிழர் வேடத்தை கொடுத்திருக்கிறார் கமல். எந்த வேடமாக இருந்தாலும் தனது வசன உற்சரிப்பின் மூலம் அசத்தும் பாஸ்கர், இலங்கை தமிழர் ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு பாசையை கற்றுக் கொண்டிருக்கிறாராம்.